ஆப்பிள் ஐபோனில் அதிரடி மாற்றம் - அதிர்ச்சியில் பயனர்கள்!
மொபைல் ஃபோன்கள் வெளியான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அப்டேட் தரப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும்.
இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும். சமீப காலமாக ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதனிடையே, ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் பற்றிய விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் மொபைல் ஃபோன்கள் வெளியான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு அப்டேட் தரப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது பிரீமியம் வகை ஃபோன்களுக்கு 7 வருடங்கள் அப்டேட் வழங்கி வருகின்றன.