Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பட்டாசு ஆலையில் நள்ளிரவு பயங்கர வெடிவிபத்து - ஐந்து பேர் பலி!

பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
11:32 AM May 30, 2025 IST | Web Editor
பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement

பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள சிங்கேவாலா கிராமத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி நிலையத்தில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலைக்குள் பட்டாசு உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் பணியில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தின்போது இருந்ததாக கூறப்படும் நிலையில்,  ஐந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்,34 பேர் காயமடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் இந்த வெடி விபத்து குறித்து முக்த்சர் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் அகில் சவுத்ரி செய்தியாளர்களிடம், “முதற்கட்ட தகவலின்படி, பட்டாசு உற்பத்திப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. இதன் விளைவாக கட்டிடம் இடிந்து விழுந்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. , தீ விபத்து அல்ல, கட்டட சேதத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

இடிபாடுகளில் இருந்து ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதாக லாம்பி துணை காவல் கண்காணிப்பாளர் ஜஸ்பால் சிங் பின்னர் உறுதிப்படுத்தினார். மேலும் காயமடைந்த34 பேர்களும் முக்த்சாரில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட மீட்புக் குழுக்கள்,  இடிபாடுகளை அகற்றி தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Fire crackersMuktsarPunjab
Advertisement
Next Article