கொடைக்கானலில் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் சம்பவம்.. பதைபதைத்த நண்பர்கள்.. உயிரை காப்பாற்றிய தீயணைப்பு துறை!
07:48 PM Mar 31, 2024 IST
|
Web Editor
அந்த வகையில் தூத்துக்குடியில் இருந்து நண்பர்கள் குழு ஒன்று டால்பின் நோஸ் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது டால்பின் நோஸ் பாறையில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அதில் தன்ராஜ் என்பவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருந்த தன்ராஜை மேலிருந்த நண்பர்கள் பார்த்துள்ளனர். பின்னர் அவரை மீட்க முயன்ற நண்பர்கள் செய்வதறியாமல் திகைத்து அங்கும் இங்குமாக ஓடி தாங்களே காப்பாற்ற முயன்றுள்ளனர். அங்கிருந்த உள்ளூர்வாசிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் டால்பின் நோஸ் பகுதியில் விழுந்திருந்த தன்ராஜை காப்பாற்ற பள்ளத்தில் இறங்கியுள்ளனர். அங்கு மரத்து அடியில் அமர்ந்திருந்த தன்ராஜை மீட்டு வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விழுந்த நண்பர் உயிருடன் இருக்கிறாரா? அவரை மீட்டனரா? என்று அங்கும் இங்குமாக அவருடன் வந்த நண்பர்கள் செய்வதறியாது திகைத்து நின்ற காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதனால் சில மணி நேரங்கள் டால்பின் நோஸ் பகுதி பரபரப்பாக காட்சி அளித்தது.
Advertisement
கொடைக்கானலில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் வருவதைப் போன்று நண்பர்கள் சுற்றுலா வர, ஒரு நண்பர் மட்டும் 100 அடி பள்ளத்தில் தவறி விழ மற்ற நபர்கள் பதறும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
Advertisement
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது தான்
டால்பின் நோஸ் பகுதி. வட்டக்கானல் வழியாக நடைபாதையாக 5 கிலோ மீட்டர் நடந்து சென்றால் தான் டால்பின் நோஸ் பகுதி தெரியும். கூர்மையான பாறை டால்பின் மூக்கு போன்று இருப்பதால் இப்பகுதிக்கு டால்பின் நோஸ் என்று பெயர் பெயர். இந்த பிரபல சுற்றுலா தளத்திற்கு பல பகுதிகளிலிருந்தும் மக்கள் சுற்றுலா வருவது வழக்கம். அதுவும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியான பிறகு இளைஞர்கள் நண்பர்களுடன் குழுவாக சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
Next Article