வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வெளுக்கும் கனமழை..
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைய பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மிகாமல் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.