Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரபிக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
10:26 AM May 22, 2025 IST | Web Editor
மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
Advertisement

வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன்படி, தெற்கு கொங்கன் - கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

Advertisement

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் (நாளை மாலை) வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியிலிருந்து ஆந்திர கடலோர பகுதிகள் வரை ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், கேரளா - தமிழ்நாடு பகுதிகளில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, வரும் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Arabic OceanKeralaLow pressure areanews7 tamilNews7 Tamil UpdatesWeatherWeather Update
Advertisement
Next Article