திருப்பதி மலையடிவாரத்தில் சிறுத்தை புலி நடமாட்டம்!
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை புலி நடமாடும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் மலையடிவாரத்தில் சிறுத்தை புலிகள் அவ்வபோது நடமாடுவது வழக்கம். அந்த வகையில் நள்ளிரவு 12 மணி அளவில் திருப்பதியில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தை புலி ஒன்று புகுந்துள்ளது . அதனை பாதுகாப்பு ஊழியர்கள் கணித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டம் குறித்து அங்கு பொருத்திவைக்கப்பட்டுள்ள ட்ராப் கேமராவில் பதிவாகியுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை புலி இந்த பகுதியில் நடமாடுவதை உறுதிசெய்துக்கொண்டு வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.