மயிலாடுதுறையிலிருந்து அரியலூர் செந்துறை பகுதியில் தஞ்சம் அடைந்த சிறுத்தை?...
மயிலாடுதுறையில் சுற்றி வந்த சிறுத்தை தற்போது அரியலூர் மாவட்டத்தில் நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மயிலாடுதுறையில் நடமாடி வந்த சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். சீர்காழி வன சரக்கத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சிறுத்தை படிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தையானது தஞ்சாவூர் பகுதிக்கு சென்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் கூண்டு அமைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சிறுத்தை யானது பிடிபடவில்லை.
இத்தகைய சூழலில் அரியலூர் மாவட்டம் செந்துறையில் சிறுத்தை சுவற்றில் ஏறி குதிக்கும் காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகி இருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறுத்தை தென்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.