Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பான்காரன்... ஜப்பான்காரன்தாயா... உப்பு சுவை தரும் மின்சார கரண்டி அறிமுகம்!

12:24 PM May 23, 2024 IST | Web Editor
Advertisement

உப்புச் சுவையை தரக்கூடிய மின்சார கரண்டியை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  ஒரு கரண்டியின் விலை ரூ.10,500 எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

ஜப்பானிய குளிர்பான நிறுவனமான கிரின் ஹோல்டிங்ஸ்,  ஒரு வித்தியாசமான மின்சார கரண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.  கரண்டி தானே இதில் என்ன இருக்கும் என நாம் ஆச்சர்யப்படலாம்.  நடிகர் கவுண்டமணியின் “ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தாய்யா” எனும் டைலாக்கை இவர்கள் நிரூபித்துள்ளனர்.  ஏனெனில் இந்த கரண்டியால் நாம் சாப்பிட்டால் உணவுகளில் உப்பு பயன்படுத்த தேவையில்லையாம்.  இந்த கரண்டி செயற்கையாக உப்புச் சுவையை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கரண்டியை பயன்படுத்துவதன் மூலம் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உப்பின் அளவை மூன்றில் ஒரு பங்கு வரை குறைக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  சுமார் 60 கிராம் எடை கொண்ட இந்த கரண்டியானது ரீ சார்ஜபிள் லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.  இது உப்பு இல்லாமல், நாக்கிற்கு உப்பு சுவையை கொடுக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

இதனால் பயனருக்கு உண்மையான உப்பு இல்லாமல் உப்பு சுவை கிடைக்கும்.  உப்பு உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம்,  பக்கவாதம் மற்றும் பிற நோய்களை தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.  கிரீன் ஹோல்டிங்ஸ் இந்த மாதம் 200 எலெக்ட்ரிக் உப்பு கரண்டிகளை மட்டும் ஆன்லைனில் விற்பனைக்காக முதற்கட்டமாக வெளியிடுகிறது.  ஒரு ஸ்பூனின் விலையானது, $127க்கு ( ரூ. 10, 500 ) விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

பின்னர் ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனையாளரிடம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலக அளவில் 10 லட்சம் எலெக்ட்ரிக் கரண்டிகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

Tags :
Electric SpoonJapanKirin HoldingsViral
Advertisement
Next Article