பழைய காரில் அகமதாபாத் To லண்டன்....குஜராத்தி குடும்பத்தின் உற்சாக பயணம்!
குஜராத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று 73 ஆண்டு கால பழமையான காரைப் பயன்படுத்தி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பது பயணம். அது ஒரு சிலருக்கு கனவாக இருக்கிறது. ஆம், அது சாதாரண பேருந்து பயணம் இல்லை. கடற்கரைப் பயணம், வரலாற்றுச் சுற்றுலா, நீண்டதூரப் பயணம் என பலரும் பல வழிகளில் வாழ்க்கையை ஒரு அட்வென்சராக மாற்ற நினைப்பர். பலர் அதனை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.
இளைஞர் தங்கள் நண்பர்களுடன் பைக்கில் சுற்றுலா செல்ல நினைப்பர். பெண்கள் தங்களின் தோழிகளோடு குழுவாக சுற்றுலா செல்ல நினைப்பர். சிலருக்க இவை இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. அந்த வகையில் குஜராத்தை சேர்த்த குடும்பம் ஒன்று 73 ஆண்டு கால பழமையான காரை பயன்படுத்தி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பயணத்தை தொடங்கிய இவர்கள் 2.5 மாதகால இடைவெளியில் 13,500 கி.மீ சாலைப் பயணத்தில் 16 நாடுகளை கடந்துள்ளனர். இந்த பயணத்தை கடந்த ஆண்டே முடித்துள்ளனர். ஆனால் இதனை சமீபத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.