Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிசு | 'தடம்' பெட்டகத்தில் இருப்பது என்ன?

07:07 AM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது? என்பது பற்றி கூறுகிறது இந்த செய்தி.

Advertisement

தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியே ‘தடம்’. கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக 'ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு'-இன் 'தடம்' எனும் முக்கிய முன்னெடுப்பை அறிமுகம் செய்தபோது, அமெரிக்காவில் நான் சந்தித்த முதலீட்டாளர்களுக்குத் "தடம் – தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்" எனும் பெட்டியினை நினைவுப்பரிசாக வழங்கியதில் பெருமையடைகிறேன்.

மரபை நவீனத்துடன் இணைப்பதன் வழியாக, நமது திறன்மிகு கைவினைக் கலைஞர்களுக்கு உலகளாவிய இயங்குதளத்தையும் வாய்ப்புகளையும் வழங்கி, நமது பண்பாட்டு மரபு பாதுகாக்கப்படுவதையும் வளர்ச்சிபெறுவதையும் 'தடம்' உறுதிசெய்யும். நமது பண்பாட்டுப் பெருமையைக் கொண்டாவோம்; முன்னேற்றுவோம்!” எனக் குறிப்பொட்டுள்ளார்.

‘தடம்’ திட்டம்:

தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் உருவாக்கப்பட்டது ‘தடம்’ திட்டம். 

பவானியின் ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர். 

பழங்கால கைவினைப் பொருள்களை சமகால தமிழர் பண்பாட்டுடன் இணைப்பதன் மூலம் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம். 

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :

திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை,
விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள்,
நீலகிரியிலிருந்து  தோடா எம்பிராய்டரி சால்,
பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்,
புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்,
கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு.

Tags :
boxCMO TAMIL NADUGiftInvestorsMK StalinThadam
Advertisement
Next Article