Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாபெரும் புத்தக பூங்கா!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
07:56 AM May 19, 2025 IST | Web Editor
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Advertisement

சென்னையில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் மூலம் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதல் தளத்தில் பொது நூலகத்துறை சார்பாக சுமார் ரூ.1.85 கோடி மதிப்பில் மெகா புத்தக பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Advertisement

இந்த புத்தக பூங்கா 5,000 சதுர அடியில் 70 புத்தக அலமாரிகள் உள்ளன. ஒரு சிறிய அரங்கம், வசதியான இருக்கைகளுடன் கூடிய மேசைகள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை ஆகியவை உள்ளன. இந்த பூங்காவில் 50-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்துகிறார்கள். இதன் மூலம், பயணிகளுக்குப் பல்வேறு வகையான புத்தகங்கள் கிடைக்கும். பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து எந்த புத்தகத்தையும் படிக்கலாம்.

அவர்களுக்கு புத்தகம் பிடித்திருந்தால், அதை வாங்கிக்கொள்ளலாம். எல்லா புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இந்த புத்தக பூங்காவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், ஆங்கிலம் மட்டுமின்றி மொழிபெயர்க்கப்பட்ட உலக மொழி புத்தகங்களும் இருக்கும். இந்த நூலகம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
book parkBooksCENTRALChennaiLibraryMetro Station
Advertisement
Next Article