நாமக்கல்லில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை!
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டது.
மார்கழி மாதம் அமாவாசையன்று அனுமன் அவதரித்ததாக இந்து சமய மக்கள் நம்புகின்றனர். எனவே அந்த நாள் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியான கோட்டை சாலையில் அமைந்துள்ள கோயிலில் 18 அடி உயர விஷ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியான இன்று (ஜன.11) 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டது.
அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமி வடைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் காலை 11 மணி வரை வடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இதையும் படியுங்கள்: ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி – மகாராஷ்டிரா சபாநாயகர்
பாலிக்கிறார். ஆஞ்சநேயருக்கு மாலையாக சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
வடைகள் தயாரிக்கும் பணியில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த 35 பேர் ஈடுபட்டனர். 2050 கிலோ உளுந்த மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 125 கிலோ உப்பு ஆகியவற்றை கொண்டு வடைகள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.