Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே 'செக்'கில் ரூ.228 கோடி நன்கொடை! சென்னை ஐஐடி-யை அசர வைத்த முன்னாள் மாணவர்!

11:46 AM Aug 07, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் கிருஷ்ணா சிவுகுலா ரூ.228 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். 

Advertisement

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடி, இந்தியா மட்டுமன்றி உலக அளவில் சிறப்பு பெற்றது. இங்கு படித்தவர்கள் இன்று உலகம் முழுவதும் பல முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்த நிலையில் சென்னை ஐஐடிக்கு முன்னாள் மாணவர் ஒருவர் சுமார் ரூ.228 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். இது இந்திய அளவில் கல்வி நிறுவனத்திற்கு அதிக அளவில் வழங்கப்பட்ட நன்கொடையாகும்.

1970 ஆம் ஆண்டு ஏரோனாடிக்ஸ் பாடப்பிரிவில் எம்.டெக் படித்த கிருஷ்ணா சிவுகுலா, ஆண்டுக்கு சுமார் ரூ.1000 கோடி வருவாய் ஈட்டக்கூடிய 2 தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார்.

இந்த நன்கொடையின் மூலம் கல்வி நிறுவனத்தை மேம்படுத்த சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
DonationIIT MadrasKrishna Chivukula
Advertisement
Next Article