கடலூரில் அரிய வகை வெள்ளை நாகம் பிடிபட்டது!
கடலூரில் கடையில் புகுந்த அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு பாதுகாப்பாக
மீட்கப்பட்டு, காப்பு காட்டில் விடப்பட்டது.
கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லெனின். இவர் அதே
பகுதியில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் நிலையில் இவரது கடையில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனையடுத்து கடலூரில் உள்ள பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அவர், கடையில் இருந்த 5 அடி நீளம் உள்ள அரிய வகை வெள்ளை நிற நாகப் பாம்பினை பிடித்து காப்பு காட்டுக்குள் பத்திரமாக கொண்டுவிட்டார்.
வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பை பிடித்த பொழுது, பாம்பு படம் எடுத்ததை
அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர். பின்னர் பாம்பை பிடித்த
செல்லா, “நமது நாட்டில் இது போன்று வெள்ளை நிற நாகங்கள் இல்லை. ஜீன் குறைபாடு காரணமாக ஓரிரு பாம்புகள் மட்டுமே இதுபோன்று வெள்ளை நிறத்தில் இருக்கின்றன” என தெரிவித்தார்.