Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொன்னமராவதி அருகே கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா!

11:54 AM Mar 22, 2024 IST | Web Editor
Advertisement

பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.  இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.  

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் சாதி, மத வேறுபாடு பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.  அதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் பிள்ளையான் கண்மாய், சின்ன ஊத்துக்கன்மாய் ஆகிய இரு கண்மாய்களில் இன்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது.  இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் கிராம மக்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர்.  அதில் ஒவ்வொருத்தருக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, அயிரை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.  அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்க்கு அள்ளிச் சென்றனர்.

Tags :
#ponnamaravathifishfish festivalPudukkottaiVillagers
Advertisement
Next Article