Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விடுதலை 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?

01:32 PM May 19, 2024 IST | Web Editor
Advertisement

விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'விடுதலை-1'.  இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  விடுதலை படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.

இதில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக கூறப்படுகிறது.  இந்த படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  தற்போது தென்காசியில் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இப்படம் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதல் பாகத்தில் கேமியோ கேரக்டரில் இணைந்த விஜய் சேதுபதி தற்போது இரண்டாவது பாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்கள் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
B Jeyamohanmovie updatesj suryaSooriVetrimaranViduthalai2Vijay sethupathi
Advertisement
Next Article