'பைரி' திரைப்படம் எப்படி இருக்கு...?
டி.கே புரொடக்ஷன் சார்பாக வி.துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் 23 பிப்ரவரி வெளியாக உள்ளது பைரி திரைப்படம். புறா பந்தயத்தை மையமாக வைத்து 2.30 மணி நேரம் நகரும் காட்சி நேற்று முன்தினம் நடந்த பத்திரிக்கையாளர்கள் காட்சியில் பார்ப்போரை திருப்திபடுத்தியதா என்று பார்க்கலாம்.
திரைப்படத்தின் கதை
கன்னியாகுமரியில் உள்ள அறுகுவிளை பகுதியில், தலைமுறை தலைமுறையாக புறாக்களை வளர்த்து பந்தயத்திற்கு விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், சையது மஜீத்தும் அந்த பகுதி வாசிகளுடன் சேர்ந்து புறா பந்தய போட்டியில் ஈடுபட்டு கோட்டை விட்டுவிடுவாரோ என்ற பயம் மஜீத்தின் தாயாருக்கு இருந்தது. இதனால் தனது மகனை அவர்களிடம் பழகவிடாமல் தவிர்த்து வந்தார்.
இருந்தாலும் மஜீத்துக்கு புறா மீதான ஆசை விடவில்லை எனவே தன் வீட்டின் மாடியில் புறாவை வளர்க்க ஆரம்பிக்கிறார். தாயாருக்கோ பிடிக்கவில்லை. இன்னொரு பக்கம் புறா பந்தயத்தில் எதிர் அணி செய்யும் சதி. இந்த சதியில் சிக்கிக்கொண்டு போராடும் மஜீத். இறுதியில் மஜீத்தின் நிலை என்ன ஆகிறது என்பது தான் படத்தின் மீதி கதை.
படம் பற்றிய அலசல்
வில்லுப்பாட்டி வழியே கதையை பாட காட்சிகளும் அதற்கு ஏற்ற வாரு அமைந்திருப்பது படத்தின் ப்ளஸ் பாயிண்ட். எந்த திசையும் திரும்பாமல் புறா பந்தயத்தின் அடிப்படை காட்சிகளையே மையமாக வைத்து நகர்கிறது. அப்படி காட்சிகள் நகர்ந்தாலும் மேக்கிங் மற்றும் விறு விறு காட்சிகள் இருந்ததால் சற்றும் போர் அடிக்கவில்லை. இருந்தாலும் ஒரு சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறது.
ஆக்ரோஷமாக ஹூரோ புறா பந்தயத்தில் ஈடுபடுவதும் தனது தாயாரை டி என்று கூறும் காட்சிகளும் கடுப்பேற்றுகிறது. ஆனால் கன்னியாகுமரி வட்டார வழக்கை பயன்படுத்தி இருக்கிறார்கள் இது ரசிக்க வைக்கிறது. புறா பந்தயம் என்றதும் மாரி படம் போல் இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். மாரி' படத்தில் இடம்பெற்று இருப்பது கரண புறா பந்தயம்.
அந்த புறா பல்டி அடிக்கும். அந்த புறா எத்தனை பல்டி அடித்தது என்பதை வைத்து, வெற்றியை அறிவிப்பார்கள். பைரி படம் பேசுவது சாதா புறா அல்லது வளர்ப்பு புறா பந்தயம் இதனை டிப்ளர் ரேஸ்னு சொல்வார்கள். இந்த பந்தயத்தில் புறா காலில் முத்திரை போட்டு பறக்க விடுவார்கள். எவ்வளவு மணி நேரம் புறா அதிகமாக பறக்கிறது என்பதை வைத்து, வெற்றியை அறிவிக்கிறார்கள்.
எனவே மாரி படத்திற்கும் இந்த படத்திற்கும் சமந்தமில்லை. பாகம் 2ல் படத்திற்கான அடுத்த கட்டமும், மீதி கதையும் இடம் பெறுகிறது. பொதுவாக அதிகபடியாக ஹைப் ஏற்றும் காட்சிகள் பாகம் 1ல் இடம்பெற்றால் பாகம் 2 அப்படியே தலைகீழாக அமையும் அதன்படி வெறித்தனமாகவும், ஆக்ரோஷமாகவும் சென்ற பாகம் ஒன்றின் காட்சிகள் பாகம் 2ல் பெரிய அளவில் பிரஸர் ஏத்தாமால் இருக்கும் என நம்புவோம்.
இப்ப இருக்கிற டீன்ஸ் படத்தில் ஹூரோ என்ன செய்தாலும் தன்னுடைய ரியல் லைப்லையும் அதனை செய்யலாம் என்ற எண்ணத்திற்குள் செல்கின்றனர். படத்தை படமாக பார்க்காமல் அதில் இருக்கும் நெகடிவ்வை விரைவாக எடுத்துக்கொண்டு அதை கெத்து என்று நினைக்கிறார்கள் இப்படி இருக்கையில் பைரி படம் கன்னியாகுமரியில் நடக்கும் உண்மை சம்பவத்தை எடுத்துரைத்தாலும் ஹூரோ எல்லாரையும் அடித்துக்கிட்டு தனது தாயார் பேச்சையும் கேட்காமல் தன் போக்கில் திரியும் காட்சிகளை கெத்து என்று நினைத்துக் கொல்லாமல் இது கதைக்காக வைத்திருக்கும் காட்சிகள் என்று ரசிகர்கள் நினைத்தால் மகிழ்ச்சி தான்.
--சுஷ்மா சுரேஷ்