Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காவல்துறை குறித்து அவதூறு பேசியதாக எழுந்த புகார் | யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!

08:22 AM May 04, 2024 IST | Web Editor
Advertisement

காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தேனியில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தேனிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சவுக்கு சங்கர் மீடியாவில் இருப்பவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சவுக்கு சங்கர் தேனியில் இருந்து கோவை அழைத்து சென்றதும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :
arrestedsavukku shankarTheni
Advertisement
Next Article