Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெற்றிக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு | நவாஸ்கனி எம்.பி. பதிலளிக்க #HighCort உத்தரவு!

06:27 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி, 1 லட்சத்து 66
ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டு 3 லட்சத்து 42 ஆயிரத்து 882 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

இதனையடுத்து, நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தேர்தல் வேட்புமனுவில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த தேர்தல் வழக்குக்கு பதிலளிக்கும்படி எம்.பி. நவாஸ்கனி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags :
ChennaiElection2024Lok Sabha ElectionMadras High CourtNavaskanio PanneerselvamOPSParliament Election
Advertisement
Next Article