Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பூர் அருகே கார் - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

10:33 AM Apr 09, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.  

Advertisement

திருப்பூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது குடும்பத்தினர் 6 பேருடன் அவர்களது காரில் திருக்கடையூர் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை சந்திரசேகரின் இளைய மகன் இளவரசன் (26) ஓட்டி வந்துள்ளார்.  அப்போது அவர்களது கார் வெள்ளக்கோவில் - காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே வந்துகொண்டிருந்த போது,  எதிரே வந்த அரசுப் பேருந்து அவர்களது காரில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த சந்திரசேகரன் (60),  அவருடைய மனைவி சித்ரா (57),  இளைய மகன் இளவரசன் (26),  மூத்த மகன் சசிதரனின் மனைவி அருவிவித்ரா (30), ச சிதரனின் மூன்று மாத பெண் குழந்தை சாஷி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சசிதரன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு,  உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக,  அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ஞானப்பிரகாசம் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Accidentcargovt busTiruppur
Advertisement
Next Article