Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளையை  ஏற்படுத்த வேண்டும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளையை  ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
08:43 PM Mar 15, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளையை  ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 160வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

Advertisement

அப்போது அவர் கூறியதாவது,  “ஜனநாயகத்தை செதுக்குவதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கை பாராட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது. அரசமைப்பை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருகிறது.

ஒரு நீதிபதி ஆங்கிலத்தில், ஒரு நீதிபதி தமிழில் பேசினார். இதுதான் இருமொழிக் கொள்கை. இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை. சட்டம் ஒரு இருட்டறை, வழக்கறிஞர்கள் வாதம் அதில் விளக்கு என்றார் பேரறிஞர் அண்ணா. அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளனர்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் அநீதிகளை தடுத்து நீதியை பாதுகாப்பவர்கள். சுதந்திரமான நீதித்துறை என்பது அரசமைப்பினர் உயிர்ப்புக்கு மிக முக்கிய அம்சம். அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. திமுக ஆட்சியில் 73 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தை கணிகனிமயமாக்க நிதி ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற கிளையை  ஏற்படுத்த வேண்டும், தென்மாநில மக்களுக்கு அது வசதியாக இருக்கும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Tags :
MadrasHCMKStalinSupreme Court Branch
Advertisement
Next Article