Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை - 3வது நாளாக தொடரும் மீட்பு பணி!

04:06 PM Dec 25, 2024 IST | Web Editor
Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 3வது நாளாகத் தொடர்கிறது.

Advertisement

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி (டிச.25) இன்று, மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தை சேர்ந்த சேத்துனா (3) பெண் குழந்தையான, கடந்த (டிச.23) அன்று சாருண்டு பகுதியிலுள்ள தனது தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அருகிலிருந்த 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்தது.

தகவலின் பேரில் அங்கு வரவழைக்கப்பட்ட மீட்புக்குழுவினர்கள், அவர்களிடம் உள்ள தற்காலிக கருவிகளை கொண்டு குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். அவர்களால் வெறும் 30 அடி அளவிற்கு மட்டுமே அக்குழந்தையை மேலே கொண்டுவர முடிந்தது. இந்நிலையில் நேற்று (டிச.24) இரவில் குழந்தையை மீட்டெடுக்க அனைந்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து, இதைப்பற்றி தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் அதிகாரி ஒருவர், ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 150 அடி ஆழத்திற்கு மற்றொரு குழி தோண்டவுள்ளதாகவும், அதிலிருந்து குழந்தைக்கு நேராகச் சுரங்கம் ஒன்று தோண்டி அக்குழந்தையை மீட்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

120 அடி ஆழத்தில் J வடிவ கொக்கியைக் கொண்டு பிடிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் உடலில் நேற்று காலையிலிருந்து எந்தவிதமான அசைவுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை சேத்துனாவின் தாத்தா ஹர்ஷியா சவுதாரி, மீட்புக் குழுவினர் 28 மணிநேரங்கள் கழித்தே தோண்டுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் அலட்சியமாகச் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags :
BabygirlborewellChildRajasthanRescue
Advertisement
Next Article