Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தெருநாய் கடித்து 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழப்பு!

ஒசூர் அருகே தெருநாய் கடித்து பலத்த காயமடைந்த 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழந்துள்ளார்.
08:21 AM Sep 22, 2025 IST | Web Editor
ஒசூர் அருகே தெருநாய் கடித்து பலத்த காயமடைந்த 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழந்துள்ளார்.
Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மாசிநாயக்கனப்பள்ளியில் உள்ள பசுமைகுடிலில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வடமாநில குடும்பத்தினர் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தியா என்ற சிறுவன் (வயது 3) வெளியில் விளையாடி கொண்டிருந்த போது தெருநாய் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில் இன்றும் தொடர் சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுவன் ரேபிஸ் நோய் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags :
ChildDeathHosurKrishnagiriNorthern StateStray Dog
Advertisement
Next Article