Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Japan | என்னது 12 வருடமாக அரை மணி நேரம் தூக்கம் தானா? யார் இந்த அதிசய மனிதர் #Daisuke Hori?

02:15 PM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த டைசுக் கோரி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக தெரிவித்தார்.

Advertisement

ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ குறைந்தது 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தேவையான தூக்கத்தை நாம் தர மறுத்தால் மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி கடுமையான தாக்கத்தை மனிதன் சந்திப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் ஒரு மனிதர் 12 ஆண்டுகளாக வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஒரு நாளை தூங்குகிறார் என சொன்னால் நம்ப முடிகிறதா? ஜப்பானை சேர்ந்த டைசுக் கோரி என்பவர் ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டும்தான் உறங்குகிறாராம். இதை கடந்த 12 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறாராம்.

மேற்கு ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதான அவர், தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துடன் சாதாரணமாகச் செயல்பட பயிற்சியளித்ததாகக் தெரிவிக்கிறார். மேலும் இந்த நடைமுறை தனது வேலை திறனை கணிசமாக மேம்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் உடற்பயிற்சி அல்லது காபி குடித்தால், நீங்கள் தூக்கத்தைத் தடுக்கலாம்” எனத் தெரிவிக்கிறார்.

இதையும் படியுங்கள் :ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற #YusufDikec - இணையத்தில் வைரலாகும் வீரர்!

டைசுக் கோரி சொல்வது உண்மையா என ஆராய ஜப்பானின் தனியார் தொலைகாட்சி, will you go with me என்ற ரியாலிட்டி ஷோவில் அவரை மூன்று நாட்கள் கண்காணித்தது. அப்போது டைசுக் கோரி வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே தூங்கினார். மேலும் எழும்பும் போது மிகவும் உற்சாகமாக எழுந்தார். காலை உணவு சாப்பிட்டார். வேலைக்கு சென்றார். இதனிடையே ஜிம்மிற்கும் செல்லுகிறார் என தெரிவித்துள்ளது.

Tags :
30minsJapanjapanese manlimitssleep
Advertisement
Next Article