Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#America | காட்டுக்குள் தொலைந்த 10 வயது சிறுமி... டிரோன் உதவியுடன் மீட்ட போலீசார் - நடந்தது என்ன?

08:28 AM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் 10 வயது சிறுமி ஒருவர் தூக்கத்தில் நடக்கும் வியாதி காரணமாக காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட நிலையில் போலீசார் டிரோன் உதவியுடன் அச்சிறுமியை மீட்டனர்.

Advertisement

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திற்கு உட்பட்ட ஷ்ரெவ்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் பெய்டன் செயின்டிக்னன் (10). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு தூக்கத்தில் நடக்கும் சோம்னாம்புலிசம் என்ற வியாதி உள்ளது என கூறப்படுகிறது. இந்த சூழலில், சிறுமி பெய்டன் இரவு நேரத்தில் தூக்கத்திலேயே நடந்து வீட்டில் இருந்து வெளியேறி லூசியானா காட்டு பகுதிக்குள் சென்றிருக்கிறார்.

சிறுமி காணாததை அறிந்த பெற்றோர், பல இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். டிரோன் மூலமும் சிறுமியை தேடும் பணி நடைபெற்றது. அப்போது, டிரோன் மூலம் சிறுமி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். பின்னர் தரையில் சுருண்டு படுத்து கிடந்த சிறுமியை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். சிறுமி 1.5 மைல் தொலைவுக்கு நடந்து வந்து காட்டுக்குள் படுத்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

வீட்டில் இருந்து சென்ற அந்த சிறுமி காட்டுக்குள் அலைந்து, திரிந்திருக்கிறாள். பின்னர் ஓரிடத்தில் படுத்து தூங்கி விட்டாள். நல்வாய்ப்பாக, கொசுக்கள் கடித்தது தவிர வேறு எந்த பாதிப்புக்கும் சிறுமி ஆளாகவில்லை. சிறுமியை டிரோன் உதவியுடன் காட்டில் இருந்து மீட்கும் காட்சிகள் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது.

Tags :
Americagirlnews7 tamilNews7 Tamil UpdatesUSViralworld news
Advertisement
Next Article