தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!
03:10 PM Feb 22, 2024 IST
|
Web Editor
தமிழக சட்டப் பேரவையில் பிப்.19ல் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப்.20ல் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் பல்வேறு கேள்விகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து பேசினர்.
Advertisement
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.12-ம் தேதி தொடங்கியது. அப்போது உரையை முழுமையாக வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் பிப்.13, 14-ல் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.
இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் நேற்றும், இன்றும் பதிலளித்த நிலையில் சட்டப் பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Article