Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் வெடித்து 94 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்!

05:08 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 94 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலையில் எரிபொருள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த டேங்கர் லாரி திடீரென சாலையில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.

அப்போது லாரியில் இருந்த எரிபொருள் சாலையில் ஆறு போல் ஓடியது. அதனை அங்கிருந்தவா்கள், அந்த வழியாக சென்றவா்கள் என பலரும் அவற்றை எடுத்து செல்வதற்கு குவிந்தனா்.

அந்த சமயத்தில் டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. இதில் டேங்கர் லாரியின் அருகே இருந்தவர்கள் உடல் கருகி பலியாகினா். சம்பவ இடத்திலேயே 94 பேர் உயிரிழந்தனா். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனா்.

Tags :
explosionfuel tankerNigeria
Advertisement
Next Article