Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயணிகள் ரயில் மீது லாரி மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு!

புதுடெல்லியில் பயணிகள் ரயில் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
09:20 PM Jan 11, 2025 IST | Web Editor
Advertisement

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பாகிஸ்தான் நாட்டில் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் லாரி ஒன்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், அவர்களின் உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக்கு கைபர் பக்துன்க்வா முதல்வர் அலி அமீன் கந்தாபூர் இரங்கல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
AccidentNewDelhiTrainTRUCK
Advertisement
Next Article