Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கண்விழித்ததும் முதல் 15 நிமிடத்தை செல்போனுடன் செலவிடும் 84% இந்தியர்கள்!

09:46 PM Feb 23, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் 84% பேர் கண்விழித்த முதல் 15 நிமிடங்களுக்கு மொபைல் போனையே பயன்படுத்துவதாக பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Advertisement

தற்போதைய காலகட்டங்களில் உணவு இல்லாமல் கூட மனிதர்கள் உயிர் வாழ்ந்து விடுவார்கள் போல. ஆனால், போன் இல்லாமல் வாழ்வது அவ்வளவு கடினம். 1 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி உள்ளனர். 1994 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட இந்த ஸ்மார்ட் போனின் பயன்பாடு கடந்த 13 ஆண்டுகளில் உச்சத்தை தொட்டுள்ளது. 2000 தொடக்கத்திலிருந்து இதன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அப்பொழுதெல்லாம் விளையாட நேரமில்லாமல் குழந்தைகள் இருப்பர். ஆனால் இக்காலக்கட்டத்தில் தன் முழு நேரத்தையும் ஸ்மார்ட் போன்களிலேயே பலரும் கழிக்கின்றனர். இந்நிலையில், பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நிறுவனம் ஸ்மார்ட் போன் உபயோகம் குறித்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. 30 நாட்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்விற்காக வயது, பாலினம், வருமானம், வாழும் இடம் மற்றும் நகர பகுதி போன்றவற்றை கணக்கில் கொண்டு 1,100 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வில் வெளிவந்த முடிவுகள் :

இந்தியாவில் உள்ள 84 சதவீத ஸ்மார்ட்போன் பயனர்கள் தினமும் காலையில் எழுந்தவுடனே முதல் 15 நிமிடங்களுக்கு போனை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 13 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அதிகரிப்பால் மனிதர்களின் நடத்தையிலும் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொழுது போக்கிற்காக மட்டுமில்லாமல் ஒரு நாளின் முழு நேரத்தையும் மொபைல் போனில் செலவிடுகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 80 முறையாவது போனை பார்த்துவிடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

50% பேர் அழைப்புகள் போன்று ஏதேனும் தேவைக்காகவும், தோராயமாக 55 சதவீதம் பேர் தெளிவான நோக்கம் இல்லாமலும், 5-10 சதவீதம் பேர் எதற்காக பயன்படுத்துகிறோம் என்று அறியாமலேயே ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன்களுக்கு அதிகம் அடிமையானவர்கள் பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளது. இதனால் பல உடல் மற்றும் மனநல பிரச்னைகள் ஏற்படுவதாகவும், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

2010 ஆம் ஆண்டுமுதல் 2023 ஆம் ஆண்டுவரை 5 மடங்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு ஸ்மார்ட் போன்களின் மலிவான விலையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. .

Tags :
BCGIndiamobile phoneSmartphoneUsers
Advertisement
Next Article