Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு!

தமிழ்நாடு அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.
12:04 PM May 31, 2025 IST | Web Editor
தமிழ்நாடு அரசுப் பணிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 8,144 பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.
Advertisement

தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் மட்டும் 8,144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இந்தாண்டில் ஒரே மாதத்தில், ஒரே நாளில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Advertisement

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த கல்வியாண்டு முடிவு பெறும்போது, அதாவது மே மாதங்களில்தான் பணி ஓய்வு பெறுவார்கள் என்பதால், ஏராளமான ஆசிரியர்கள் இன்றுடன் அதாவது மே 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால்தான், ஒரே நாளில் சுமார் 8,144 பேர் பணி ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறைகளில் மே 31ஆம் தேதி நிலவரப்படி 9.42 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சுமார் 7.33 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். தற்போது மாநில அரசு ஊழியர்களின் பணி ஓய்வுபெறும் வயது 60.

Tags :
Govt StaffsRetirementTamilNadu
Advertisement
Next Article