பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கிய 8 தமிழர்கள்!
11:06 AM Jul 04, 2024 IST
|
Web Editor
இரு கட்சிகள் சார்பிலும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட முன்பை விட அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அத்துடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளிலும் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் எனவே கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
பிரிட்டனில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் போட்டியிடுகின்றனர்.
Advertisement
பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியினரான ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று பிரிட்டனில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும் தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
அந்த வகையில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி குத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் பிரிட்டன் தேர்தலில் இம்முறை போட்டியிட்டுள்ளனர்.
Next Article