'ஒரு கொலைக்கு 8 Suspect... திணறும் போலீஸ்' - விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியானது 'சுழல் 2' டிரெய்லர்!
மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கதிர். மேலும் இவர் விஜய்யுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையே, இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான 'சுழல்' வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில் கதிருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், நிவேதிதா சதீஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனையடத்து, இத்தொடரின் இரண்டாம் பாகம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இதனை பிரம்மா மற்றும் சர்ஜுன் கேஎம் இணைந்து இயக்கியுள்ளனர். இதற்கான திரைக்கதையை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி எழுதியுள்ளனர். இந்த வெப் தொடர் வரும் 28ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இத்தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கொலை அரங்கேறியுள்ளது. அந்த கொலையை செய்ததாக 8 பெண்கள் மீது சந்தேகம் எழுகிறது. கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் தீவிரம் காட்டுவதை போல் காட்டப்பட்டுள்ளது. முதல் பாகத்தை போலவே இதுவும் விறுவிறுப்பு மர்மம் என அனைத்தையும் கொண்டு நகர்வதைபோல் அமைந்துள்ளது.