8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! திருச்சி, நாகர்கோவில் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள்!
05:14 PM Feb 14, 2024 IST
|
Web Editor
திருச்சி மாநகராட்சி ஆணையர் நியமனம்
Advertisement
திருச்சி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் சரியாக நடப்பதற்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் மிக மிக அவசியமானவை. இதற்கு வழி ஏற்படுத்தும் வகையிலும், நிர்வாக ரீதியிலான மாறுதலுக்காகவும் பணியிடமாற்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதையொட்டி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
- உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளர் ஏ.சுகந்தி மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- நில சீர்திருத்த துறை இணை ஆணையர் எஸ்.பி.அம்ரித், உள்துறை, கலால் வரித் துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியர் பி.ரத்தினசாமி வணிக வரித்துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநர் வி.சரவணன், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்
- நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
- GUIDANCE செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சிக்கு புதிய அதிகாரி
- தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக செயல் இயக்குநர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) இடமாற்றம் செய்யப்பட்டார்.
- சென்னை வணிக வரித்துறை இணை ஆணையர் (உளவுத்துறை) வீர் பிரதாப் சிங் ராமநாதபுரம் மாவட்ட நகர்ப்புற மேம்பாடு ஏஜென்சியின் கூடுதல் ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
Next Article