Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு 7வது தங்கம்..!

06:32 PM Jan 23, 2024 IST | Web Editor
Advertisement

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் மேலும் ஒரு தங்கப்பதக்கம் பெற்று தற்போது வரை தமிழ்நாடு 7 தங்கம் பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Advertisement

மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018-ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதையும் படியுங்கள் : ரூ.1003 கோடி முதலீட்டில் புதிய நிறுவனம் – முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிகளில் கபடி, ஜூடோ, ஸ்குவாஷ், ஃபென்சிங், பாக்‌ஷிங் , ஜிம்னாஸ்டிக்ஸ், யோகாசனம், ஹாக்கி, மல்லாகம்ப், கட்கா, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், துப்பாக்கிச் சுடுதல், வாலிபால், பளுதூக்குதல், கோ கோ, வில்வித்தை, பேட்மிண்டன் உள்ளிட்ட பல பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதுவரையில் நடந்த போட்டிகளில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாடு 6 தங்கம், 2 வெண்கலம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கம் உள்பட மொத்தமாக 13 பதக்கங்கள் கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 4 தங்கம், 6 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என்று மொத்தமாக 21 பதக்கங்கள் கைப்பற்றி 2ஆவது இடத்திலும், ஹரியானா 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என்று மொத்தமாக 16 பதக்கங்கள் கைப்பற்றி 3ஆவது இடத்திலும், டெல்லி 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என்று மொத்தமாக 9 பதக்கங்கள் கைப்பற்றி 4ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளன. குஜராத் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கத்துடன் பதக்க பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மகளிருக்கான ஸ்குவாஷ் போட்டியில் தமிழ்நாடு வீராங்கானை பூஜா ஆர்த்தி மகாராஸ்ட்ரா வீராங்கனையை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பு கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு தனது 7வது தங்கத்தினை வென்றுள்ளது. இதன் வாயிலாக பதக்கப்பட்டியலில் முதல் இடத்தில் தமிழ்நாடு நீடிக்கிறது. 

Tags :
#SportsGoldKheloIndiaMedalTamilNaduTamilnadu Teamudayanidhistalin
Advertisement
Next Article