Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

79-வது சுதந்திரதினம் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

79-வது சுதந்திரதினத்தையொட்டி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
08:50 AM Aug 15, 2025 IST | Web Editor
79-வது சுதந்திரதினத்தையொட்டி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "அகிம்சை எனும் அறப்போரால், ஆங்கிலேயே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்து போராடி வென்றிட்ட, இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில்,

Advertisement

நம் தாய்திரு நாடு விடுதலை பெற, போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச்செம்மல்களை போற்றி வணங்கி நினைவுகூர்வதுடன், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி தத்துவத்தின் இன்றைய நீட்சிகள் அகற்றப்பட்டு,
நம் முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திடவும்,
மாநில நலன்காக்கும் நல்லாட்சி அமைந்திடவும்,

இந்நன்னாளில் நம்நாடு போற்றும் உத்தமர்களை மனதில் நிறுத்தி உறுதியேற்போம்...வாழிய பாரத மணித்திரு நாடு". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
79th Independence DayADMKedappadi palaniswamiIndiaTamilNaduWishes
Advertisement
Next Article