79-வது சுதந்திரதினம் - விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் அன்பார்ந்த விடுதலை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு பட்டோலை பறக்கும் நமது தேசிய கொடியை நான் மட்டுமல்ல அனைத்து மாநிலம் முதலமைச்சர்களும் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.
தேசியக்கொடி ஏற்றி வைக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மூவர்ண கொடிக்கு கம்பீரமாக வணக்கம் செலுத்துவதும், தியாகிகளுக்கு போற்றுவது நம் வாழ்நாள் கடமை மட்டுமல்ல நாட்டுக்கும் செலுத்தும் மரியாதை தான். அனைத்து தேசிய இன மக்களும் போராடி பெற்றதே இந்த சுதந்திரம்.
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம், சிலைகள் அமைத்தது திமுக தான். பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு மணிமண்டபம், பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டன், மூதாதை ராஜாஜி மணிமண்டபம், கப்பலோட்டிய வஉசி நினைவுச் சின்னம், தேவருக்கு மணிமண்டபம் வீரர்களுக்கு இலவச பேருந்து பயணம், மாவீரர் புலி தேவர் மணிமண்டபம் என நாட்டிற்காக உழைத்த தியாகிகளுக்கு உழைத்த அரசு தான் திராவிட முன்னேற்ற அரசு. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்னை தொடர்ந்து மருது சகோதரர்கள் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.
தகைசால் தமிழர் விருது இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது இஸ்ரோ தலைவர் முனைவர் டாக்டர் வி. நாராயணனுக்கு வழங்கப்பட்டது.
கல்பனா சாவ்லா விருது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு வழங்கப்பட்டது.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டது.