Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும்,10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
08:44 AM Mar 17, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன. இந்நிலையில், இந்த 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. கடந்த 11-ந் தேதி, இம்மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

Advertisement

இந்த மசோதாவில், தற்போதைய 4 மசோதாக்களில் ஏற்கனவே உள்ள பல அம்சங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களை தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.

இந்நிலையில், புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

"இந்தியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட்டையோ அல்லது போலி விசாவையோ அல்லது முறைகேடாக பெறப்பட்ட பயண ஆவணங்களையோ பயன்படுத்தினால் 2 ஆண்டுகளுக்கு குறையாமலும், 7 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ.1 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

உரிய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள் வரையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும்.

வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை உணவகங்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் , நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம். வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
fake passportsIndiaparliamentPrisonvisas
Advertisement
Next Article