Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 முக்கிய ஆலோசனை கூட்டங்கள்!

12:40 PM Jun 02, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெல்லப்போவது யார்? என்பதை முன்கூட்டியே கணிக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

ரிபப்ளிக் டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி,

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று 7 கூட்டங்கள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அடுத்த 100 நாட்களுக்கான செயல் திட்டம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பிரதமர் மோடி 7 கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், எம்பிக்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ரீமால் புயல் பாதிப்பு மற்றும் கடுமையான வெயிலின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த 7 கூட்டங்களும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
100day Project7 meetingsElection2024Narendra modiPMModi
Advertisement
Next Article