Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட 7 மீனவர்கள் சென்னை வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏழு மீனவர்கள் சென்னை வருகை ...
09:01 AM Mar 27, 2025 IST | Web Editor
Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மணம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த
பிப்ரவரி 20ஆம் தேதி அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். கச்சத்தீவு
அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த பொழுது. இலங்கை கடற்படையினர் அப்பகுதிக்கு வந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நான்கு மீனவர்களை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.  அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வாவுனியா சிறையில் அடைத்தனர்.

தகவல் அறிந்து மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 7 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட ஏழு மீனவர்களும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள்
மேற்கொண்ட பின்பு, அவர்களுக்கு அவசர கால கடவு சீட்டுகள் வழங்கி கொழும்பில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் ஏழு பேருக்கும் குடியுரிமை சோதனை, சுங்க சோதனை என அனைத்தையும் மேற்கொண்ட பின்பு, விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர். வெளியே வந்த மீனவர்கள் அனைவரையும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, ராமேஸ்வரம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

Tags :
ChennaiFishermenReleaseSri Lanka
Advertisement
Next Article