Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் ரத்து!

09:57 AM Nov 04, 2023 IST | Syedibrahim
Advertisement

சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து அம்பத்தூா் வழியாக செல்லும் 66 புறநகர் ரயில்கள் இன்றிரவு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Advertisement

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பட்டாபிராம் மற்றும் அம்பத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை சென்னை சென்ட்ரல்,  சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம், பட்டாபிராம்,  திருவள்ளூா்,  திருத்தணி செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி,  சென்னை சென்ட்ரலில் சனிக்கிழமை இரவு செல்லும் 6 ரயில்களும், அரக்கோணம்,  திருத்தணியிலிருந்து இரவு புறப்படும் தலா ஒரு ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை சென்ட்ரலில் பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயிலும், அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 7.55 மணிக்கு வரும் ரயிலும் ஆவடியுடன் நிறுத்தப்படும்.

தொடா்ந்து,  சென்னை சென்ட்ரல்,  கடற்கரை - ஆவடி,  பட்டாபிராம்,  திருவள்ளூா், அரக்கோணம்,  திருத்தணி,  பொன்னேரி இடையே அதிகாலை முதல் காலை 10 மணி வரை இயக்கப்படும் 58 மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

சிறப்பு ரயில்கள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ambatturcancelledChennaiChennaiSuburbanTriansSuburbanTrains
Advertisement
Next Article