Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு" - நேரடி வரிகள் வாரியத் தலைவா்!

10:17 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா் என நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் தெரிவித்தாா். 

Advertisement

இதுதொடா்பாக நேரடி வரிகள் வாரியத்தலைவா் ரவி அகா்வால் கூறியதாவது,

"வருமான வரி செலுத்துபவர்களுக்கு வரி செயல்முறைகளை எளிமைப்படுத்துவதே மத்திய அரசு மற்றும் நேரடி வரி வாரியத்தின் நோக்கம்.   இவ்வாறு எளிமைப்படுததுவது அதிகப்படியான மக்கள் வருமான வரி செலுத்த உதவும்.  2024-25ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட கால அவகாசம் வழக்கம்போல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

கடந்த நிதி ஆண்டில் ஜூலை 25ம் தேதி சுமாா் 4 கோடி போ் வருமான வரி தாக்கல் செய்த நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த 22ம் தேதி இரவே முறியடிக்கப்பட்டது.  நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா். கடந்த நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் முடியும் வேலையில் சுமாா் 7.5 கோடி போ் தாக்கல் செய்தனா். இந்த நிதி ஆண்டின் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது."

இவ்வாறு நேரடி வரிகள் வாரியத்தலைவா் ரவி அகா்வால் தெரிவித்தார்.

Tags :
CBDTCentral Board of Direct TaxIncome TaxRavi Agarwaltax
Advertisement
Next Article