60 ஆண்டுகள்... எண்ணூர் கோரமண்டல் இன்டர்நேஷனல் தொழிற்சாலை பற்றிய முழு விவரம் இதோ..!
கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலை எப்போது தொடங்கப்பட்டது, அங்கு என்னென்ன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் 1960-ம் ஆண்டு ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சென்னை எண்ணூர் உற்பத்தி அலகு, 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தை முருகப்பா குழுமம் மற்றும் EID பாரி நிறுவனம் இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த நிறுவனத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பயிர்களுக்கு தேவையான சிறப்பு ஊட்டச்சத்து பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் 16 உற்பத்தி அலகுகளைக் கொண்ட கோரமண்டல் நிறுவனம், க்ரோமர், கோதாவரி, பரம்ஃபோஸ், பாரி கோல்ட், பாரி சூப்பர் ஆகிய பெயர்களில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை தயாரிக்கிறது.
இதையும் படியுங்கள் : அமோனியா வாயுவை சுவாசிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?
மேலும் 30 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் ஆலோசனை, மண் பரிசோதனை, பண்ணை இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட விவசாய சேவைகளையும் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்கி வருகிறது.