இரண்டாவது முறையாக உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்… என்ன செய்தார் தெரியுமா?
செங்கல்பட்டைச் சேர்ந்த 6 வயது சிறுவன் இரண்டாவதாக உலக சாதனை படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் விஜய் - அருணா தம்பதி. இவர்களுக்கு ரக்ஷன் என்ற 6 வயது மகன் உள்ளார். ரக்ஷன் UKG பயின்று வருகிறார். சிறுவன் ரக்ஷன் ஒரே மாதத்தில் பயிற்சியாளரின்றி தாமாகவே நீச்சல் கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ரக்ஷன் ஏற்கெனவே கைகளை பின்புறம் கட்டியப்படி 28 மீட்டர் தூரத்தை 1.59 நொடிகளில் நீந்தி உலக சாதனை படைத்தார். இந்நிலையில் அவர் இரண்டாவதாக உலக சாதனை படைத்து அவரின் முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
அதன்படி, அவர் தனது இரண்டு கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு மூச்சு விடாமல் 25 மீட்டர் தூரத்தை வெறும் 33 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த இரண்டு சாதனைகளும் லிங்கன் புக் ஆப் ரெக்காடிசில் இடம் பிடித்துள்ளது. அதே போல இவரது சாதனையை வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.
லிங்கன் புக் ஆப் ரெக்காட்சின் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல் சிறுவனை நேரில் சந்தித்து சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகர் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் KAS சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவன் ரக்ஷனை வாழ்த்தினர்.