Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராமநாதபுரம் தொகுதியில் 6 ஓபிஎஸ் வேட்புமனுக்களும் ஏற்பு!

02:27 PM Mar 28, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.  ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி,  அதிமுக சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிட உள்ள நிலையில், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இதையும் படியுங்கள் : செந்தில்பாலாஜி புதிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு – சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இந்நிலையில்,  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 5 பன்னீர்செல்வத்தின் வேட்புமனுக்களையும் தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளனர்.

Tags :
#INDIAAllianceஓ_பன்னீர்செல்வம்Elections2024ElectionswithNews7tamilLokSabhaElection2024OPanneerselvamOPS
Advertisement
Next Article