Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சைக்கிள் ஓட்டும்போது #Phone பேசினால் 6 மாதம் சிறை... எங்கு தெரியுமா?

05:02 PM Nov 03, 2024 IST | Web Editor
Advertisement

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு புதிய போக்குவரத்து விதிகளை அமல்படுத்தியுள்ளது.

Advertisement

பைக், கார் போன்ற வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பேசினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளது. அவ்வாறு வாகனம் ஓட்டும் போது போன் பேசினால் கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்குள்ளாகும் அபாயம் இருப்பதால், போக்குவரத்து விதிகளின் படி அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், இதற்கு ஒரு படி மேல் சைக்கிள் ஓட்டும் போது செல்போன் பேசினால் தண்டனை விதிக்கப்படும் என்ற உத்தரவை ஜப்பான் அரசு பிறப்பித்துள்ளது.

ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது செல்போன் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வதால் அதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த அதிரடி உத்தரவை ஜப்பான் அரசு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் படி, சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது எனவும் இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தத்தை ஜப்பான் அரசு கொண்டு வந்துள்ளது.

Tags :
cell phonecyclejailmobile phoneNew Traffic Lawsworld news
Advertisement
Next Article