Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

92 வயதில் 5-வது திருமணம்! காதலியை கரம் பிடிக்கும் ரூபர்ட் முர்டோக்!

02:56 PM Mar 08, 2024 IST | Web Editor
Advertisement

92 வயதான ரூபர்ட் முர்டோக் தனது காதலியான 67 வயதுடைய எலினா ஜுகோவாவை திருமணம் செய்ய இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (92). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், இவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

எலெனா ஜுகோவா ஒரு ஓய்வு பெற்ற மூலக்கூறு உயிரியலாளர்.  ரூபர்ட் முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையேயான திருமணம் கலிபோர்னியாவில் உள்ள பங்களாவில் நிகழ்த்த உள்ளதாக ரூபர்ட் தெரிவித்துள்ளார்.  இது இவருடைய 5 வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபர்ட் முர்டோக்வின் முதல் மனைவி பெடிர்கா புக்கர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் விமான பணிப்பெணாக இருந்தார்.  இவரை 1956-ம் ஆண்டு ரூபர்ட் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 1967-ம் ஆண்டு முதல் மனைவியை ரூபர்ட் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து 1967-ம் ஆண்டு அனா டெவோ என்ற செய்தி வாசிப்பாளரை ரூபர்ட் 2வது திருமணம் செய்துகொண்டார். இவருடன் ரூபர்ட் 32 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக அனாவை ரூபர்ட்வை கடந்த 1999-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதையடுத்து, வெண்டி டங்க் என்பவரை ரூபர்ட் 1999-ம் ஆண்டு 3வது திருமணம் செய்தார். அவரையும் கடந்த 2013-ம் ஆண்டு ரூபர்ட் விவாகரத்து செய்தார். வெண்டி டங்க்  மூலம் தான் எலனா ஜுகோவாவை ரூபர்ட் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 2016-ம் ஆண்டு ஜெர்ரி ஹால் என்பவரை ரூபர்ட் 4வது திருமணம் செய்தார். பின்னர் 2022-ம் ஆண்டு ஜெர்ரியை, ரூபர்ட் விவாகரத்து செய்தார். 4 திருமணங்கள் செய்த ஜெர்ரிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது 92வது வயதில் 5வது திருமணத்திற்கு ரூபர்ட் தயாராகி வருகிறார்.

யார் இந்த ரூபர்ட் முர்டோக்?

முர்டோக் 1950களில் ஆஸ்திரேலியாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1969 இல் நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் மற்றும் தி சன் செய்தித்தாள் நிறுவனங்களை வாங்கினார். நியூயார்க் போஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உட்பட பல அமெரிக்க வெளியீட்டு நிறுவனங்களையும் இவர் வாங்கினார். பின்னர் 1996 இல் ஃபாக்ஸ் நியூஸைத் தொடங்கினார். இது இப்போது அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சி செய்தி சேனலாகும்.

தொடர்ந்து, 2013 இல் நியூஸ் கார்ப் நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் நூற்றுக்கணக்கான உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களின் உரிமையாளராக இருந்தார். முர்டோக்கின் வாழ்க்கை சர்ச்சைக்குரியது ஆகும். முர்டோக் அரசியல் விவகாரங்களில் தனது செல்வாக்கிற்காக விமர்சிக்கப்பட்டார். 

Tags :
Elana ZhukovaJerry HallMedia EmpireNews7Tamilnews7TamilUpdatesRupert MurdochWedding
Advertisement
Next Article