Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

300கிராம் பிஸ்கெட் பாக்கெட்டில் 52கிராம் எடை குறைவு - பிரிட்டானியாவுக்கு ரூ.60ஆயிரம் அபராதம்!

08:08 PM May 23, 2024 IST | Web Editor
Advertisement

300கிராம் பிஸ்கெட் பாக்கெட்டில் 52கிராம் எடை குறைந்ததால்  பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.60ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஒரு கடையில் பிஸ்கட் பாக்கெட்டோ அல்லது ஏதோவொரு பொருளோ வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். என்றைக்காவது அதன் எடை அதன் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள அளவுதானா என ஒருமுறை சரிபார்த்திருக்கிறீர்களா? . பெரும்பாலான மக்கள் அதன் எடை குறித்தும் அதன் கலாவதியாகும் தேதி குறித்தோ கவலைப்படுவதே இல்லை.

இந்த நிலையில் கேரள மாநிலம் திருசூரைச் சார்ந்த ஜார்ஜ் தட்டில் என்கிற நபர் அவரது வீட்டருகே உள்ள சுக்கிரி ராயல் பேக்கரியில் இரண்டு பிரிட்டாணிய நிறுவனத்தில் நியூட்ரி சாய்ஸ் தின் ஆரோ ரூட்ஸ் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். 300கிராம் எடையுள்ள இந்த பிஸ்கெட்டுகளை தலா ரூ.40 கொடுத்து வாங்கியுள்ளார்.

இதன் பின்னர் பிஸ்கெட் பாக்கெட்டுகளின் எடையை பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள எடையுடன் அவர் ஒப்பிட்டுப் பார்த்தார். ஆச்சரியமாக இரண்டு பாக்கெட்டுகளும் வெவ்வேறு எடை கொண்டதாக இருந்தது. 300 கி இருக்க வேண்டிய பிஸ்கெட் பாக்கெட்டுகள் ஒன்று  268 கி மற்றும்  248 கி என இருந்ததால் இதனை புகாராக அளித்து வழக்கு தொடர முன்வந்தார்.

திருச்சூர் லீகல் மெட்ராலஜியின் பறக்கும் படையின் உதவிக் கட்டுப்பாட்டாளரிடம் ஜார்ஜ் புகார் அளித்தார், பின்னர் அவர் எடை குறைபாட்டை சரிபார்த்து உறுதிப்படுத்தினார்.  இதனைத் தொடர்ந்து அவர் திருச்சூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை (மாவட்ட ஆணையம்) அணுகி நுகர்வோர் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட நிதி, உடல் மற்றும் மன ரீதியான உளைச்சலுக்கு இழப்பீடு கோரினார்.

இதன் பின்னர் பிரிட்டானியா நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட பேக்கரி ஆகிய இரண்டும் நோட்டீஸ் வழங்கிய பின்னரும் மாவட்ட ஆணையத்தில் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்யத் தவறியதை அடுத்து அதனை நுகர்வோர் நீதிமன்றம் கண்டித்தது.

உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இருவரின் செயல்களும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சட்ட அளவியல் சட்டம் 2009 இன் பிரிவு 30 (நிலையான எடை அல்லது அளவை மீறும் பரிவர்த்தனைக்கான அபராதம்) ஆகியவற்றை மீறுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, புகார்தாரருக்கு இழப்பீடாக ₹50,000 மற்றும் அவர் தொடுத்த வழக்குச் செலவுக்காக ₹10,000 தொகையை எதிர்தரப்பு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.

 

Tags :
BiscuitBritaniaCondumer CourtNutri Choiceweight
Advertisement
Next Article