Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 வயது சிறுமியின் படுக்கை அறையில் 50,000 தேனீக்கள்!

02:36 PM May 02, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் படுக்கை அறையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தேனீக்களை கண்டுபிடித்துள்ளனர்.  

Advertisement

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் பகுதியில் ஆஸ்லே மாசிஸ் கிளாஸ் என்ற பெண் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.  இவருக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.  அந்த சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் இருப்பதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.  ஆனால் சிறுமியின் பெற்றோர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அது சிறுமியின் கற்பனையாக இருக்கலாம் என சிறுமியின் பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்.   இதனால் சிறுமியின் பெற்றோர் அந்த வீட்டில் வெப் கேமரா பொருத்தி ஆய்வு செய்தனர்.

அப்போது தான் சிறுமியின் படுக்கை அறையில் ஒரு பெரிய தேன் கூடு இருப்பதை கண்டனர்.  அவர்கள் இது குறித்து பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு தெரிவித்தனர்.  இதனையடுத்து வீட்டிற்கு வந்த தேனீ வளர்ப்பாளர், சிறுமியின் படுக்கை அறையில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தேனீக்கள் கொண்ட தேன் கூட்டை அகற்றினார்.

Tags :
#BeesAmericaNorth Carolina
Advertisement
Next Article