Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்: அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

04:51 PM Feb 16, 2024 IST | Web Editor
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி,  சாதனை படைத்த  அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடி வருகிறார்.  டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இதுவரை 279 போட்டிகளில் விளையாடி மொத்தம் 727 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட்போட்டியுடன் 499 விக்கெட்டுகள் எடுத்திருந்த அஸ்வின்,  தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை ராஜ்கோட்டில் தற்போது நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதன்படி குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் 2வது நாளில்,  இங்கிலாந்து வீரர் ஸாக் க்ராலியின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார்.  இதன்மூலம் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் ஒன்பதாவது சர்வதேச பந்துவீச்சாளராக அஸ்வின் வரலாற்றில் பெயர் பதித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக உள்ளார். அந்த சாதனைப் பட்டியலில் இரண்டாவது நபராக அஸ்வின் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags :
500 TestAshwincm stalinCMoCricketTest Cricket
Advertisement
Next Article