Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை..!

06:44 AM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

5மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 4மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Advertisement

இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.    இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் முடிவுகள் டிச.3ம் தேதியான இன்று அறிவிக்கப்பட உள்ளது.

நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் :

இந்த நிலையில் நவம்பர் 30 ஆம் தேதியன்று நடந்து முடிந்து 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

மத்தியப்பிரதேசம்

230 எம்எல்ஏக்களைக் கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவைக்கு,  நவம்பர் 17-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி, மத்தியப் பிரதேசம் பாஜகவுக்கு சாதகமாகவே உள்ளது.

ராஜஸ்தான்

200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25-ம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  கருத்துக் கணிப்புகளின்படி,  ராஜஸ்தான் மாநிலம்,  பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடுமையான போட்டியாக இருக்கும் என தெரியவந்துள்ளது.  அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்,  புதிய ஆட்சியை அமைப்பதில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் கை மேலோங்கும்.

சத்தீஸ்கர்

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7 மற்றும் 17 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  சத்தீஸ்கர் மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா

ஆந்திராவில்  இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலங்கானாவில் நடைபெற்ற 3-வது சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும்.  மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மையானால் தெலங்கானா மாநில தேர்தல் முடிவு ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.  கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரத ராஷ்டிர சமிதி 2-வது இடத்திற்கும்,  பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்த நிலையிலும் பாஜக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்று கணிப்புகள் கூறுகின்றன.


இந்த நிலையில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மூலம் பிற்பகலுக்கு முடிவுகள் தெரிய வரும். மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
5State ElectionChattsigharelection resultmadya pradeshRajasthanresultTelangana
Advertisement
Next Article